மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த COVID தொற்றின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதம் வரை குறைந்துவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். மூன்றாவது அலையின் April நடுப்பகுதியில் இருந்து தினசரி புதிய தொற்றுகள் 70 சதவீதம் குறைந்துள்ளதாக வைத்தியர் Tam தெரிவித்தார்.
கனடாவில் தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,700 புதிய தொற்றுக்கள் பதிவாகின்றன. கடந்த மாத இந்த எண்ணிக்கை தினசரி சராசரியாக 9,000 புதிய தொற்றுக்களாக இருந்தது .
இதேவேளை கனடாவில் திங்கட்கிழமை வரை, தகுதிவாய்ந்த கனேடியர்களில் 58 சதவீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.