மத்திய அரசின் புதிய modelling விவரங்களை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில் தொற்றின் மூன்றாவது அலை கனடா முழுவதும் குறைந்து வருவதாக தெரியவருகின்றது.
ஆனாலும் சில பகுதிகள் தொடர்ந்து சமீபத்திய தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்வதாக புதிய modelling விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தொற்றின் மூன்றாவது அலை வீழ்ச்சியடைந்து வருவதாகவும், புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளை எளிதாக்க இன்னும் நேரம் வரவில்லை எனவும் Tam கூறினார்
ஒரு மாதத்திற்கு முன்னர் நாடு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது புதிய தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், அவசர சிகிச்சையின் அவசியம், இறப்பு ஆகியவற்றில் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.