விமானப் பயணிகளுக்கான கட்டாய மூன்று நாள் hotel தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆராய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த விடயம் குறித்து மாகாண மற்றும் பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களுடனான சந்திப்பில் மத்திய சுகாதார அமைச்சர் Patty Hajdu விவாதிக்கவுள்ளார். கட்டாய hotel தனிமைப்படுத்தும் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என வியாழக்கிழமை மத்திய ஆலோசனைக் குழுவின் ஒரு பரிந்துரை வெளியாகியிருந்தது.
ஆனாலும் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி முடிவை எடுக்காது என அமைச்சர் Hajdu கூறினார். இந்த கட்டாய hotel தனிமைப்படுத்தும் திட்டம் கடந்த January மாதம் பிரதமர் Justin Trudeauவினால் அறிவிக்கப்பட்டது.