தேசியம்
செய்திகள்

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

COVID  விதிகளை மீறியதாக காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் NDP தலைவர் Jagmeet Singh இந்த விடயத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.  

NDP தலைவர் COVID கட்டுபாடுகளை மீறும் வகையில் தனது வீட்டை சேராத ஒருவருடன் முகமூடி அணியாமல் பயணித்தது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையானது என NDP கட்சி உறுதிப்படுத்தியது.

Singhகின் சகோதரரும் மாகாண சபை உறுப்பினருமான Gurratan Singhகின் நிர்வாக உதவியாளராக பணிபுரியும் Taranvir Dhaliwalலுடன் NDP தலைவர் ஒரே வாகனத்தில் இருந்து வெளியேறுவதை இந்த வீடியோ காட்டுகிறது.

பெரும்பாலான கனடியர்கள் போலவே, பொது சுகாதார ஆலோசனையை பின்பற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்துள்ளதாகவும் Singh கூறினார். இந்த விடயம் குறித்து மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது நடவடிக்கை முகமூடிகளை அணிந்து கொள்வதிலிருந்தும் பொது சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவதில் இருந்தும் எவரையும் ஊக்கப்படுத்தாது என நம்புவதாகவும் Singh இந்த விடயம் குறித்து கூறினார்.

Related posts

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Lankathas Pathmanathan

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

Leave a Comment