தேசியம்
செய்திகள்

June மாத நடுப்பதிக்குள் கனடாவை வந்தடையவுள்ள 20 இலட்சம் Moderna தடுப்பூசிகள்

June மாத நடுப்பகுதிக்குள் 20 இலட்சம்  Moderna COVID தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன.

கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப் படுத்தினார். மூன்று தொகுதிகளாக இந்த தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. அடுத்த வாரம் இரண்டு தொற்றுதியாக 5 இலட்சம் தடுப்பூசிகளும், June மாதம் 14ஆம் திகதி மேலதிகமாக 15 இலட்சம் தடுப்பூசிகளும் கனடாவை வந்தடையவுள்ளன.

June மாதத்தின் இரண்டாம் பாகத்தில்  கூடுதல் அளவுகளில் தடுப்பூசியை விநியோகிக்க  Moderna இணங்கியுள்ளதாக அமைச்சர் ஆனந்த் கூறினார்.
இதுவரை கனடா 55 இலட்சம்  Moderna தடுப்பூசிகளை பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

Gaya Raja

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் பலி

Leave a Comment