COVID தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறைந்த விகிதங்களை கனடா காண்கிறது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
கனடாவின் தடுப்பூசி வழங்கும் முயற்சி தொடரும் நிலையில் மிகச் சிலரே தடுப்பூசி பெற்ற பின்னர் தொற்றால் பாதிக்கப்படுவதாக கனடாவின் பொது சுகாதார அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. May மாதம் 13ஆம் திகதிவரை முதல் தடுப்பூசி பெற்றவர்களில் 13 ஆயிரத்து 461 பேர் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டதாக தரவுகள் பதிவாகியுள்ளன
இவற்றுள் 64 சதவீத தொற்றுக்கள் முதல் தடுப்பூசி பெற்ற 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.