தேசியம்
செய்திகள்

மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை பெற்று விநியோகிக்கும் பணி தொடர்கிறது: பிரிகேடியர்-ஜெனரல் Krista Brodie

வாராந்தம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை பெற்று விநியோகிக்கும் பணி தொடர்வதாக கனடாவின் தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவர் பிரிகேடியர்-ஜெனரல் Krista Brodie தெரிவித்தார்.

தனது புதிய பதவியை ஏற்ற பின்னர் வியாழக்கிழமை Brodie  முதல் தடவையாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இந்த வாரம், மத்திய அரசாங்கம் 20 இலட்சம் Pfizer தடுப்பூசிகளை விநியோகித்துள்ளதாகவும் நாளை மேலும் 14 இலட்சம்  தடுப்பூசிகள் கனடா முழுவதும் அனுப்பப்படும் எனவும் கூறினார்.

இந்த வாரம் 11 இலட்சம் Moderna தடுப்பூசிகளை கனடா பெற்றுள்ளதாக தெரிவித்த Brodie  அவை சனிக்கிழமைக்குள் மாகாணங்களுக்கு பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்படும் என கூறினார். இந்த வாரம் 5 இலட்சத்து 34 ஆயிரம் AstraZeneca தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்ததாக கூறிய அவர்,  மாகாணங்களும் பிரதேசங்களும்  அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான பணிகள் தொடர்வதாக கூறினார்.

June மாத இறுதிக்குள் 400 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்கும் நிலை உள்ளதாகவும் Brodie வியாழக்கிழமை கூறினார்.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

Joe Biden கனடியர்களின் ஒரு சிறந்த நண்பன்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment