Ontarioவில் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
புதன்கிழமை 1,588 புதிய தொற்றுக்களையும் 19 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது March மாதம் 24ஆம் திகதிக்கு பின்னரான மிகக் குறைந்த தொற்றுக்களின் எண்ணிக்கையாகும். இதன் மூலம் ஏழு நாள் சராசரி தொற்றுகளின் எண்ணிக்கை 2,183 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 2,370 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை Ontarioவில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதன்கிழமை அவசரமற்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மாகாண அளவிலான இடைநிறுத்தம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.