மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா வேறு நாடுகளுக்குஅனுப்ப வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா தேவையான பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கனேடியர்களில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே முழுமையாக தடுப்பூசியை பெற்ற நிலையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
கடந்த வாரம், கனடாவில் பல மாகாணங்கள் AstraZeneca தடுப்பூசியின் முதல் வழங்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேவேளை கனடா மேலதிகமாக 6 இலட்சத்து 55 ஆயிரம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் என புதன்கிழமை அரசாங்கம் அறிவித்தது.