கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் June மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்டுக்கும் இடையிலான எல்லை குறைந்தது ஒரு மாதத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டிருக்கும். கடந்த வருடம் March மாதம் 21ஆம் திகதி முதல் இரு நாடுகளுக்கும் இடையே அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
எங்கள் பகிரப்பட்ட எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair தனது அமெரிக்க சகாக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்தார்.