தேசியம்
செய்திகள்

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

WE அறக்கட்டளைக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்குவதில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர் Justin Trudeau Conflict of Interest சட்டத்தை மீறவில்லை என நன்னெறி ஆணையர் Mario Dion தீர்ப்பளித்துள்ளார்.

ஆனாலும் முன்னாள் நிதி அமைச்சர் Bill Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளதாகவும் நன்னெறி ஆணையர் தெரிவித்தார். வியாழக்கிழமை WE அறக்கட்டளையுடன் தொடர்புள்ள நன்னெறி ஆணையாளரின் அறிக்கை வெளியானது. Trudeauவும் Morneauவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து இரண்டு தனித்தனி விசாரணைகளை நன்னெறி ஆணையர் ஆரம்பித்தார்.

நன்னெறி ஆணையாளரின் அறிக்கை, தான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்ததை உறுதிப்படுத்துகிறது என பிரதமர் Trudeau தெரிவித்தார். இந்த சர்ச்சையை எதிர்கொண்டு அமைச்சரவையை விட்டு வெளியேறி Morneau தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

Related posts

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் வாசித்த முதலாவது சிம்மாசன உரை

Lankathas Pathmanathan

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment