தேசியம்
செய்திகள்

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

கனடாவின் பொருளாதாரம் கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகளை இழந்தது.

1 இலட்சத்து 29 ஆயிரம் முழு நேர வேலைகளும் 78 ஆயிரம் பகுதி நேர வேலைகளும் April மாதம் இழக்கப்பட்டதாக  Statistics கனடா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் மூலம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் January மாதத்தின் பின்னர் முதல் முறையாக உயர்வடைந்தது. March மாதம் 7.5 சதவீதமாக இருந்த வேலையற்றோர் விகிதம் April மாதம்  8.1 சதவீதமாக உயர்ந்தது.

Ontarioவிலும் British Columbiaவிலும் அதிக எண்ணிக்கையில் கடந்த மாதம் வேலைகள் இழக்கப்பட்டன. Ontarioவில் 1 இலட்சத்து 53 ஆயிரம் வேலைகளும், British Columbiaவில்  43 ஆயிரம் வேலைகளும் இழக்கப்பட்டன.  இந்த இரண்டு மாகாணங்களும் அதிகரிக்கும்  COVID தொற்று எண்ணிக்கை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Toronto நகர முதல்வருக்கு எதிராக பார்த்தி கந்தவேல் புகார்

Lankathas Pathmanathan

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment