Nova Scotia கடுமையான எல்லை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.
அதிகரிக்கும் COVID தொற்று பரவலின் மத்தியில் முதல்வர் Iain Rankin இந்த அறிவித்தலை வெளியிட்டார். Nova Scotia தொடர்ந்தும் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அதிக எண்ணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை பதிவு செய்தது. வெள்ளிக்கிழமை 227 புதிய தொற்றுக்களும் ஒரு மரணமும் Nova Scotiaவில் பதிவானது.
Prince Edward Island, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் இருந்து செல்பவர்களுக்கு Nova Scotiaவின் எல்லை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த மாதம் இறுதிவரை பாடசாலைகள் மூடப்படும் என முதல்வர் Rankin அறிவித்தார்.