December 12, 2024
தேசியம்
செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் கனடியர்கள் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

கட்டாய தனிமைப்படுத்தல்  காலத்தை மீறும் பயணிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க தனது அரசாங்கம் தயாராக உள்ளதாக  பிரதமர் Trudeau  தெரிவித்தார்/ ஆனாலும் எல்லைக் கடவையில் மேலும் வலுவான கட்டுப்பாடுகளுக்கான Ontario முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளார்.

விமான நிலையங்களில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அமெரிக்காவுடனான நில எல்லைகளிலும் நீட்டிக்கப்பட வேண்டும் என  Ontario மாகாண முதல்வர்  Doug Ford கோரியிருந்தார். இருந்த போதிலும் தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

Iqaluit நகரில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

COVID AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment