December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்

பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்: நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்!

பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்:
நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்
PM Justin Trudeau pandemic promises: What was kept – what was broken

பிரதமர் Justin Trudeau ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த ஊடகவியலாளர் சந்திப்பு, அன்றாடசந்திப்பாக மாறியது. இதன்போது அவர் கனேடியர்களை COVID முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஆரம்ப காலங்களில் அவர் அதிக வாக்குறுதிகளையும் வழங்கினார்.
மாகாணங்களுக்கு பாதுகாப்பான மீளாரம்ப நிதி – safe restart funding, தேசிய தடுப்பூசி கொள்முதல்

  • national vaccine procurement, ஊதிய மானியம் – wage subsidy, முக்கிய அவசரகால பதிலீட்டு
    நலன்கள் – emergency response benefits என்பன தொடர்ந்து தலைப்புச் செய்திகளாகின. தொண்டு
    நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்குமான உதவித் திட்டங்கள் முதல் சுகாதார ஆய்வுக்கான நிதிமுதல் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை – PPE –உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது வரை,பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக கடந்த வருடம் (2020) March மார்ச் 11ஆம் திகதி அரசாங்கம் ஒப்புக்கொண்ட 1 பில்லியன் டொலர் நிதியை விட செலவுகள் தற்போது
    தாண்டிவிட்டன. ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், ஆரம்பத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் இன்றைய நிலை குறித்து ஆராய்கின்றோம்.
  • தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ ஆய்வு VACCINES, PPE MEDICAL RESEARCH மில்லியன் கணக்கான உலகளாவிய COVID உதவித்
    தொகைக்கு மேலதிகமாக, கனேடிய மத்திய அரசாங்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு உபகரணங்களை கனடாவில் தயாரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சை களிலும் கவனம் செலுத்தியது.
  • தொற்றின் இரண்டாம் அலைக்கு முன்னதாக வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க வாக்குறுதிகள் இங்கேதரப்பட்டுள்ளன.
    March 20, 2020: சுகாதாரத் துறையின் உயிர்காக்கும் பொருட்களின் இருப்புகளை உயர்த்தும்
    பொருட்டு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக வர்த்தக
    நிறுவனங்களையும் உற்பத்தியாளர்களையும் தங்கள் உற்பத்தி திறன்களை முன்னிலைப்படுத்த ஒரு புதிய திட்டத்தை Trudeau அறிவித்தார். அந்த ஆரம்பகட்ட அழைப்பிலிருந்து, 6,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை இன்று வரை வழங்கியுள்ளன, 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முகக் கவசங்கள், சத்திரசிகிச்சை முகக்கவசங்கள், மருத்துவ ஆடைகள், சுவாசக் கருவிகள், மூச்சியக்கிகள் (ventilators) போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) மீள் உருவாக்கம் செய்துள்ளதாக Innovation, Science and Economic Development Canada (ISED) தெரிவித்துள்ளது. ‘பல சந்தர்ப்பங்களில், அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்குவது கனடாவின் தற்போதைய, எதிர்கால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிரந்தர வணிகக் கொள்கைகளாக (Lines of business) மாறியுள்ளதாக March 17 ஆம் திகதி ISED வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 23, 2020:

உள்நாட்டு ஆய்வுகள், மருத்துவ உற்பத்தி நிறுவனங்கள், கற்கை நிறுவனங்கள்
ஊடாக COVIDக்கான தடுப்பூசி தயாரிப்புகளுக்கும் சிகிச்சைகளுக்கும் 192 மில்லியன் டொலர்களைமத்திய அரசாங்கம் செலவிடும் என பிரதமர் அறிவித்திருந்தார். அதன் பின்னர் வந்த மாதங்களில்,மில்லியன் கணக்கான டொலர்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டு, அவை கனேடிய உயிரி உற்பத்தி(biomanufacturing) மற்றும் ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றன. எவற்றுக் கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சில உதாரணங்கள்: Vancouverவரை தளமாகக் கொண்ட AbCelleraவுக்கு அதன் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆய்வுகள் மற்றும் உற்பத்தி வசதியைக் கட்டியெழுப்ப 175.6 மில்லியன் டொலர்கள், Montreal – Royalmount பகுதியில் கனடாவின் National Research Council தனது புதிய உயிரியல் (biologics) தயாரிப்புகளுக்கான நிலையத்தை நிர்மாணிக்க 126 மில்லியன் டொலர்கள், COVID பரவலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்காக கனேடிய சுகாதார
ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து 114.9 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

March 31, 2020:

ஆய்ந்தறிதல் சோதனை (diagnostic testing), மூச்சியக்கிகள் (ventilators) மற்றும்
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் என Trudeau அறிவித்திருந்தார். இதுவரை, கனடா 43.5 மில்லியன் rapid சோதனைத் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ளதுடன், அவற்றில் 31 மில்லியனுக்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் கீழ் 60.3 மில்லியன் முகக்கவசங்கள் (face shields), 782 மில்லியன் சோடி கையுறைகள், 130.7 மில்லியன் லிட்டர் மருத்துவ ஆடைகள், 20.6 மில்லியன் லிட்டர் கை சுத்திகரிப்பு திரவம் (hand sanitizer) மற்றும் 115.3 மில்லியன் N95 முகக்கவசங்களை
கடந்த மாதம் வரையில் பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோல், கனடா 40,000க்கும் மேற்பட்ட மூச்சியக்கிகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் இதுவரை பாதிக்கும் மேற்பட்டவை தான் வந்து சேர்ந்துள்ளன.

May 22, 2020:

தொற்றைக் கண்டறியும் செயலி ஒன்றினை (contact tracing app) வெளியிடவுள்ளதாக
பிரதமர் அறிவித்ததுடன், இரண்டு மாதங்களின் பின்னர் அது வெளியிடப்பட்டது. COVID Alert என அழைக்கப்படும் குறித்த செயலி தொற்றுள்ள ஒருவர் அருகில் இருந்தால் அதனை கனேடியர்களுக்கு அறிவிக்கும். COVID எச்சரிக்கை என அழைக்கப்படும் இது ஒரு வெளிப்பாடு அறிவிப்பு பயன்பாடாகும், இது கனடியர்களுக்கு தொற்று உள்ள ஒருவர் அருகில் இருப்பதைத் தெரிவிக்கும். தவறுகள் (bugs) அல்லது பிற பயன்பாட்டு அம்சங்களை நிவர்த்தி செய்ய தொடர்ச்சியான புதுப்பிப்புகளை இந்த செயலி கொண்டிருந்தது. ஆரம்பத்தில், எல்லா மாகாணங்களும் இந்த செயலியை ஏற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் Patty Hajdu தெரிவித்தார். March மாதம் 16 ஆம் திகதி (2021) வரை 6.3 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கியுள்ளனர். இருப்பினும் இது அனைத்து மாகாணங்களிலும் பாவனைக்கு வரவில்லை.
British Columbia, Alberta, Yukon, Nunavut ஆகிய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் இந்த செயலி உபயோகிக்கப்படவில்லை . வணிகக் கடன்கள், மானியங்கள், வாடகை நிவாரணம் BUSINESS LOANS, GRANTS, RENT RELIEF கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்ட போது, தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் 27 பில்லியன் டொலர் நேரடி உதவி களையும் வர்த்தக நிலையங்களுக்கு 55 பில்லியன் டொலர்களையும் விரைந்து வழங்குவதாக மத்திய அரசாங்கம் முதலில் வாக்குறுதியளித்தது. இந்த உதவி தொடர்ந்து வந்த வாரங்களிலும்
மாதங்களிலும் கணிசமான அளவு விரிவுபடுத்தப்பட்டது.

March 27, 2020:

அரச உத்தரவாதத்துடன் வட்டியில்லாமல் வங்கிகள் முதல் வருடத்திற்கு வழங்கும்
40,000 டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள விரும்பும் சிறு வணிக நிறுவனங்க ளுக்கான புதிய அவசர வணிகக் கணக்குத் திட்டத்தை Trudeau வெளியிட்டார். இதன் படி, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடனின் நிலுவைத் தொகையை நிறுவனம் திருப்பிச் செலுத்த முடிந்தால், 10,000 டொலர்கள் வரை செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டது. விரிவாக்கப்பட்ட தகுதி கொண்ட திட்டத்தின் கீழ், 840,000க்கும் மேற்பட்ட வணிகங்கள் CEBA கடன்களைப் பெற்றுள்ளன. மொத்தம் 44 பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையிலான வணிக
நிறுவனங்கள் தங்கள் கடன்களை ஏற்கனவே திருப்பிச் செலுத்தியுள்ளன.

April 16, 2020:

வசந்த காலத்தில் கிடைக்கும்படியாக, வணிக நிறுவனங்களுக்கு வாடகை உதவித்
திட்டத்தை பிரதமர் Trudeau அறிவித்தார். ஆனால் பின்னர் அத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
மாகாணங்களிலும் பிரதேசங்களிலும், மன்னிக்கத்தக்க கடன்கள் அடங்கலாக, வணிக
சொத்துரிமையாளர்களுக்கு சிறு வர்த்தக நிறுவனங்களிடமிருந்து குறைந்த வாடகை அல்லது வாடகை வசூலிக்காதிருப்பதற்காக கடன்கள் வழங்கப்பட்டன. இதுவரை 138,550 தனித்துவமான விண்ணப்பதாரர்கள் அதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், 1.9 பில்லியன் டொலருக்கும் அதிகமான மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

May 5, 2020:

உணவு விநியோகப் பிரச்சினைகள், பதனிடும் ஆலைகளின் பாதுகாப்பிற்காக மத்திய
அரசாங்கம் 252 மில்லியன் டொலர்களை அறிவித்தது. உணவு பதனிடுபவர்கள்
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கும், சுகாதார
நெறிமுறைகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கும், கனடாவில் தயாரிக்கப்படும் உணவின் அளவை அதிகரிக்க உள்நாட்டு செயலாக்க திறனை விரிவாக்குவதற்கும் இதில் 77.5 மில்லியன் டொலர் உள்ளடக்கப்பட்டது. Agriculture and Agri-Food கனடாவின் தரவுகளின் படி, இதுவரை, 558 திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மூலங்களில் இருந்து 5 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதுடன், மேலும் 5 மில்லியன் டொலர்களை சேர்க்கும் திட்டங்களும் உள்ளன. நிதி பெறும் உணவு பதனிடும் நிறுவனங்களில் British Colombiaவை தளமாகக் கொண்ட Earth’s Own Food Company, Quebecகின் வெள்ளரி (cucumber) தயாரிப்பாளர் Serres Toundra, Alberta இறைச்சி பதனிடும் நிறுவனமான Viva-Deli ஆகியன
அடங்கும்.

May 11, 2020:

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களைக்
கொண்ட நிறுவனங்களுக்கு நிதி அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல மில்லியன் டொலர் கடன் திட்டத்தை Trudeau அறிவித்தார். Large Employer Emergency Financing Facility (LEEFF) எனப்படும் இத்திட்டம், பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு தமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான மேலதிக பணப்புழக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் தொழிலாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் நொடிந்து போகாமலிருக்கவும் வசதி செய்கிறது. Finance கனடாவின் கூற்றுப்படி, 12 பெரும்
எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு

விண்ணப்பித்துள்ளனர், அவற்றில் நான்கு நிறுவனங்களுக்கு கடன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.ஏனையவை இன்னமும் பரிசீலனைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த திட்டத்தை ‘கடைசி கடன் வழங்குநர்’ என்று அழைக்கும் திணைக்களம், பிற நிதி விருப்பங்களை எடைபோடும் போது, வணிக நிறுவனங்கள் சில நேரங்களில் விண்ணப்பித்தாலும் பங்கேற்க மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது.

மக்களுக்கான உதவி
SUPPORT FOR PEOPLE

வேலையில்லாத கனேடியர்களுக்கான அவசர உதவிகள், வேலையின் மூலம் சுகயீன விடுப்பிற்கு ஊதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஆதரவாக பின்னர் வந்த திட்டங்கள் தவிர, மத்திய அரசு பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களில் மக்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டது.

April 22, 2020:

பெருந்தொற்றால் வேலை வாய்ப்புகளை இழந்த மாணவர்கள், April பிற்பகுதியில்
அறிவிக்கப்பட்ட 9 பில்லியன் டொலர் ஒதுக்கீட்டிலான திட்டத்தில் (package) இலக்காகக் கொள்ளப்பட்டனர். இதன் மூலம் இரண்டாம் நிலை கல்வியை முடித்த தகுதியான மாணவர்கள் May முதல் August வரை மாதத்திற்கு 1,250 டொலர்களைப் பெறுகின்றனர். விசேட தேவையுடையவர்கள் அல்லது விசேட தேவையு டையவர் களை கவனித்துக்கொள்ளும் ஒருவருக்குஇந்தத் தொகை 1,750 டொலராக அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டம் கோடை காலத்திற்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, தற்போது நிறுத்தப்பட்டுள்ள கனடா மாணவர்
சேவை மானிய முன்முயற்சியை (Canada Student Service Grant) உருவாக்கியது – இந்த ஒப்பந்தம் முறையான செயல்முறை இல்லாமல் WE அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இது Trudeau, அவரது குடும்பத்தினர், அறக்கட்டளையுடன் நெருங்கிய குடும்ப உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் Bill Morneau ஆகியோரை உள்ளடக்கி கருத்து முரண்பாட்டு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.

May 7, 2020:

சில அத்தியாவசிய முன்களப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக
Trudeau அனைத்து மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்குமான ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.அசாதாரண சூழலில் மிக முக்கிய பணியில் ஈடுபட்டாலும் மிகக் குறைவான ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களுக்காக 6 பில்லியன் டொலர் வரை மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியது. Finance கனடா தரவின் படி, இதுவரை மத்திய அரசு மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் நேரடி கொடுப் பனவுகள் மூலம் 2.6 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது, ஆனால் இதன் விளைவாக எத்தனை தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வைக் கண்டார்கள் என்பதில் தரவுகள் எதுவும் இல்லை.

May 14, 2020:

ஆரம்பத்தில் தங்கள் கதவுகளை மூடிய பின்னர், சில தேசிய பூங்காக்கள் விரைவில்
சில மாற்றங்களுடன் பகுதியளவில் மீண்டும் திறக்கப்படும் எனவும், கோடை காலத்தில் முகாமிடல் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்காக பரவலாக திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார். 2021 வசந்த கால ஆரம்பத்தில், எதிர்வரும் பருவத்தில் உள்நாட்டில் பெருந்தொற்று நிலையைப் பொறுத்து, வருகை தரும் பார்வையாளர்களுக்கான அணுகல் மற்றும் முகாமிடல் சேவைகள் மீண்டும் மட்டுப்படுத்தப்படலாம் என Parks Canada குறிப்பிட்டது.

August 26, 2020:

தனிநபர் கற்றலுக்கான தயார்ப்படுத்தலில் – March மாதத்திற்குப் பின்னர் முதல்
முறையாக – மத்திய அரசு மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 பில்லியன் டொலர் வரை உறுதியளித்தது. சுகாதார பாதுகாப்புடனான மீள் ஆரம்ப ஒப்பந்தத்திற்காக (Safe Restart Agreement) மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 19 பில்லியன் டொலர் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்வி தொடர்பான சட்ட உதவிகளை வழங்குபவர்களும் ஆசிரியர்களும் இதுவரை வகுப்பறைகளின் அளவு குறித்தான தமது அக்கறையை வெளியிட்டு வருவதுடன், COVID பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிக ஒதுக்கீடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 2 பில்லியன் டொலரின் முதல் பாதி 2020 இலையுதிர் காலத்தில் மாற்றப்பட்டதாகவும் இரண்டாம் பாதியைப் பெற மாகாணங்களும் பிரதேசங்களும் 2020 December இறுதிக்குள் ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததாகவும் அரச மட்ட விவகாரங்களுக்கான (Intergovernmental Affairs) அமைச்சரின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். “வகுப்புகளுக்கு பாதுகாப்பாக மீளத் திரும்ப உதவுவதற்காக முதலில் வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக தேவைப்படுவதையும் பாடசாலை ஆண்டின் இரண்டாம் பாதியில் இரண்டாவதாக வழங்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படும் என்பதை அனுமானிப்பதையும் விபரிப்பதற்காகவே இந்தக் கடிதம். அனைத்து
மாகாணங்களும் பிரதேசங்களும் தங்கள் கடிதத்தை சமர்ப்பித்ததுடன், அனைவரும் இரண்டாவது பணப் பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்” எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய பயண புதுப்பிப்புகள் மற்றும் உதவிகள்
MAJOR TRAVEL UPDATES AID

கடந்த வசந்த காலத்தில் பெருந்தொற்று ஏற்பட்டதால் விமானப் பயணங்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன. ஆரம்பகால தொற்றுக்கள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்கள் காரணமாக ஏற்பட்டிருந்ததால், கனேடிய எல்லைகளை திறந்து வைத்திருக்கும் மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்தை சிலர் விமர்சித்தனர். கனேடிய மண்ணில் முதன்முதலில் இனங்காணப்பட்ட 118 தொற்றுக்களில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் மூலம் ஏற்பட்டவை என ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், எல்லைக்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பின்னர் பயணங்கள் மூலம் தொற்றுக்கள் பரவுவது கணிசமாகக் குறைந்துவிட்டது.

March 16, 2020:

தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கனேடியர்கள்
அல்லாதவர்கள் கனடிய எல்லைக்குள் நுழைவது தடுக்கப்படும் என Trudeau கூறினார். நிரந்தர கனேடிய குடியிருப்பாளர்கள், கனேடிய குடிமக்களின் நேரடி குடும்ப உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், விமானப் பணியாளர்கள், அமெரிக்க குடிமக்கள் தற்போதும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

March 18, 2020:

இரண்டு நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கா – கனடா இடையிலான எல்லை
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எல்லை தற்போது வரை மூடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள், தொற்றாளர்கள் எண்ணிக்கை, எல்லை மீள திறக்கப்படுவதை தீர்மானிக்கும் எனவும் எப்போது கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என நிபுணர்களுடன் ஆலோசிப்போம் எனவும் கனேடியர்களின் பாதுகாப்பே முதன்மைானது எனவும் March மாதம் 12 ஆம் திகதி (2021) பிரதமர் Trudeau தெரிவித்தார்.

March 20, 2020:

வெளிநாடுகளில் சிக்கியுள்ள கனேடியர்களை திருப்பி அழைக்க அரசாங்கம்
விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Trudeau கூறினார். உடனடியாக நாடு திரும்ப முடியாதவர்களுக்கு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் 5,000 டொலர் வரை கடன்களை வழங்கியது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கனேடியர்களுக்கு இதுவரை கடனுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக Global Affairs திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த கடன்களின் மொத்த மதிப்பு 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

April 14, 2020:

பயணிகள் ‘ நம்பகமான தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்தை’ வழங்க வேண்டும்
அல்லது தனிமைப்படுத்தலுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் 14 நாட்களைக் கட்டாயமாகக் கழிக்க வேண்டும் எனும் நடவடிக்கைகள் உட்பட அரசாங்கம் மிகவும் கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அறிவித்தது. ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகள் பயன்பாட்டின் தொடக்கமாக இது இருந்தது – இது கனடாவிற்குள் நுழைய கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கையாக தற்போது உள்ளது. March மாதம் 1ஆம் திகதி , 2021 வரை, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் – Quarantine Act – 129 அபராதங்களை (மொத்தமாக 169,000 டொலர்களுக்கும் அதிகம்) தனிநபர்களுக்கு RCMP விதித்துள்ளது.

April 17, 2020:

பயணங்களுக்கு முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்ட போது,
‘முகக்கவசம் அணியுங்கள் அல்லது விமானத்தில் ஏற மறுக்கப்படுவீர்கள்’ – Mask up, or be denied boarding your flight – என April நடுப்பகுதியில் அறிவுறுத்தப்பட்டது. கப்பல்கள, புகையிரதம் அல்லது பேருந்துகளில் பயணிக்கும் எவரும் அதனையே செய்ய வேண்டும் என Transport Canada வலியுறுத்தியது. கனடாவின் முகக்கவசக் கொள்கை தற்போதும் பின்பற்றப்படுகிறது.

June 12, 2020:

கோடையில் சர்வதேச பயணத்தைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியில்,
Ottawa சர்வதேச பயணிகளுக்கு கட்டாய காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டது. இது July மாத இறுதியில் கனடாவின் நான்கு பெரிய விமான நிலையங்களில் உள்நாட்டு பயணிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. பயணிகள் தற்போது கனடாவிற்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR பரிசோதனை அறிக்கையை தாம் பயணிக்கும் விமான நிறுவனத் திடம் சமர்ப்பிக்க வேண்டும். கனடா வருகை தந்தவுடன் மற்றுமொரு
பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான உதவி
SUPPORT FOR MOST VULNERABLE

COVID தொற்றின் தாக்கத்திற்கு எதிரான சக்தியை கனேடியர்கள் எவரும் பெற்றிராத நிலையில், நாட்டின் மிகவும் நலிவுற்றவர்கள் மீதான அதன் தாக்கம் தகவின்றியுள்ளது. வீடுகள் இல்லாத அல்லது ஆபத்தான வாழ்க்கை நிலைமைகளில் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் எனும் உத்தரவால் சவால்களுக்கு முகங்கொடுத்தனர். தொடர்புகளை மட்டுப்படுத்த வேண்டிய தேவை காரணமாக, பலருக்கும் இருந்த மனநல பிரச்சினைகள் அதிகரிக்கப்பட்டன. நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் இருந்தவர்கள் மீதான தாக்கம் பாரதூரமாகவிருந்தது. பெருந் தொற்றின் ஆரம்ப கட்டங்களில், கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் இருந்த இந்தக் குழுவினரை இலக்கு வைக்க அரசாங்கம் முயன்றது.

March 29, 2020:

பெருந்தொற்றின் தொடக்கத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களை
ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் முதல் முயற்சியில், முதியோருக்கு உதவும் உள்ளூர்
அமைப்புகளுக்கு வழங்க United Wayற்கு Trudeau 9 மில்லியன் டொலர்களை அறிவித்தார். மேலதிக ஆலோசகர்களை பணியமர்த்துவதற்காகThe Kids Help Phone 7.5 மில்லியன் டொலர்களைப் பெற்றது. United Way இணையத்தில் வௌியிட்டுள்ள அறிக்கையில், நாடெங்கிலும் உள்ள 77 உள்ளூர் பிரிவுகளுக்கு அரசாங்க நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

April 3, 2020:

அவசரகால சலுகைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கனேடியர்களின் ‘அவசர
உணவுத் தேவைகளை’ நிவர்த்தி செய்ய Trudeau 100 மில்லியன் டொலர்களை அறிவித்தார். அதிலிருந்து Food Banks கனடாவிற்கு 50 மில்லியன் டொலர்கள் கிடைத்தன. Salvation Army, Second Harvest, Community Food Centres கனடா, Breakfast Club of கனடா ஆகியவற்றுக்கு 20 மில்லியன் டொலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

April 4, 2020:

Status of Women கனடா குழுவைச் சேர்ந்த Women and Gender Equality கனடாவிற்கு
40 மில்லியன் டொலர்களும், பாலியல் தாக்குதல் மையங்களின் உடனடி தேவைகளை நிவர்த்தி செய்ய மற்றொரு 30 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. மற்றொரு 10 மில்லியன் டொலர்கள் கனடாவின் 46 அவசரகால காப்பகங்களுக்கு (emergency shelters) வழங்கப்பட்டது. திணைக்களத்தின் குடும்ப வன்முறை தடுப்பு திட்டத்தின் (Family Violence Prevention Program) மூலம் நிதி நேரடியாக விநியோகிக்கப்பட்டதாகவும் மாகாணத்திலும் Yukon பிராந்தியத்திலும் வாழும் பெண்கள், குழந்தைகளுக்கு சேவை வழங்கும் காப்பகங்களின் அன்றாட
செயற்பாட்டை முன்னெடுக்க இந்நிதி உதவும் எனவும் Indigenous Services கனடாவின் பேச்சாளர் தெரிவித்தார்.


April 14, 2020:

குறிப்பாக வடக்கு பழங்குடி சமூகங்களுக்கான உதவித் திட்டங்கள்
வெளியிடப்பட்டன. விசேடமாக, பிராந்திய அரசாங்கங்களுக்கு 73 மில்லியன் டொலர்கள், மத்திய அரசின் அவசர உதவித் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வணிகங்களுக்கு 15 மில்லியன் டொலர்கள், உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்காக வடக்கிற்கு விமானம் மூலம் பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு மானியம் வழங்க 17.3 மில்லியன் டொலர்கள், Nutrition North திட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்கள் (இத்திட்டம் பின்தங்கிய சமூகங்களின் உணவுச் செலவிற்கான மானியத்தை வழங்குகிறது). December நிலவரப்படி, மத்திய அரசு பழங்குடி, வடக்கு
சமூகங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு – Indigenous and northern communities and organizations – குறிப்பிட்ட COVID உதவித் திட்டத்திற்காக 4.2 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

May 3, 2020:

கனேடியர்களுக்கு மெய்நிகர் சுகாதாரப் பாதுகாப்பு வளங்களை மேம்படுத்துவதற்கும்
தொடங்குவதற்கும் 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை Trudeau ஒதுக்கினார். இதன் மூலம் மனநல சுகாதார கருவிகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கான அணுகலுடன் Wellness Together எனும் இணைய முகப்பு உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, March மாதம் 2 ஆம் திகதி (2021) நிலவரப்படி, கனடா முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் குறித்த இணைய முகப்பை அணுகியுள்ளனர்.

May 12, 2020:

பெருந்தொற்றுக்கால உடனடித் தேவைகளுக்காக நேரடியாகப் பணத்தை
செலுத்துவதாக முதியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. முதியோர் பாதுகாப்பு (Old Age Security) ஓய்வூதியத்திற்கு தகுதியுள்ளவர்கள் 300 டொலர் கட்டணத்தையும் Guaranteed Income Supplementற்கு தகுதியுடையவர்கள் 200 டொலர்களையும் பெறுவர். திட்டத்தின் மொத்த செலவு 2.5 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. July மாதம் இந்த பணம் விநியோகிக்கப்பட்டது.

June 5, 2020:

விசேட தேவையுடைய சில கனேடியர்களுக்கு 600 டொலர்கள் வரை ஒரு முறை வரி
விலக்கு கட்டணம் (one-time tax-free payment) ஒன்றை Trudeau அறிவித்தார். June மாதம் 1ஆம் திகதி வரை, ஊனமுற்றோர் வரிக்கழிவு பெற தகுதியுள்ள அனைவருக்கும் முழு உதவித்தொகையும் சென்றடைந்தது. இதற்கிடையில், செல்லுபடியாகும் ஊனமுற்றோர் வரிக்கழிவு (Disability Tax Credit) சான்றிதழ், முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ( Old Age Security) தகுதியானவர்கள் 300 டொலர்களைப் பெற்றனர். இந்த இரு திட்டங்களுக்கும் தகுதியானவர்களும் Guaranteed Income
Supplementற்கு தகுதியானவர்களும் 100 டொலர்களைப் பெற்றனர்.

July 31, 2020:

கோடையில் பண்ணைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அதிகரித்து
வரும் COVID தொற்றைத் தடுக்கும் முயற்சியாக, ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளின்
பாதுகாப்புத்தரத்தை மேம்படுத்த 35 மில்லியன் டொலர்களையும் சுகாதார ஆய்வுகளை மேம்படுத்த 16 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையையும் உதவி நிறுவனங்களுக்கு 7 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையையும் வழங்குவதாக Trudeauவின் அரசாங்கம் உறுதியளித்தது.

மூலம் Rachel Aiello & Sarah Turnbull
தமிழில் Bella Dalima

Related posts

September வரை மூடப்படவுள்ள Ontario பாடசாலைகள் ;இணையவழிக் கல்வியும் இடர்பாடுகளும்

Gaya Raja

COVID தொற்றால் பாதிக்கப்படும் இனக்குழுமம்

Gaya Raja

ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்த ஒப்புதல் மதிப்பீடு பெற்ற Ontario முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment