Albertaவின் Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு Albertaவில் COVID 19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் இந்த உள்ளூர் அவசரகால நிலையை நகராட்சி அறிவித்தது. இது தொற்றின் பரவலை எதிகொள்ள உள்ளூர் சபைக்கு அதிக அதிகாரங்களை அளிக்கிறது.
இந்த அவசர உத்தரவு தமது பகுதியில் தொற்றின் பரவல் எவ்வளவு தீவிரமானது என்பதை குறிப்பதாக Wood Buffalo நகர முதல்வர் கூறினார். கனடாவில் தொற்றின் எண்ணிக்கை விகிதம் அதிகம் உள்ள மாகாணமாக Alberta உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.