தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு மேலதிக COVID தடுப்பூசிகளை எதிர்காலத்தில் வழங்குவோம்: அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்கா கனடாவுக்கு மேலதிகமாக COVID தடுப்பூசிகளை எதிர்காலத்தில் வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் உரையாடினர்.

கனடாவிற்கு மேலும் உதவி செய்வோம் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden கூறினார். மேலதிகமான தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பும் திட்டம் குறித்து Biden புதன்கிழமை சுட்டிக்காட்டினார். கனடாவில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள AstraZeneca தடுப்பூசிகளை அமெரிக்கா தன் வசம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி Biden தெரிவித்தார்.

அமெரிக்கா ஏற்கனவே கனடாவுக்கு 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசியை வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமர் Justin Trudeauவிற்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் அரை மணி நேரம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

Quebecகில் ஒரே அதிகாரப்பூர்வ மொழி French: புதிய மசோதா

Gaya Raja

John Tory நகர முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகினார்

Lankathas Pathmanathan

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment