COVID தொற்றின் புதிய திரிபின் உலகளாவிய பரவல் மத்தியில், பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகின்றது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam புதன்கிழமை இந்த தகவலை தெரிவித்தார். புதிய திரிபின் பரவல் அதிகரித்துள்ள இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தல், குறிப்பிட்ட பலனை மாத்திரம் கனடாவிற்கு வழங்கும் என அவர் கூறினார்.
இந்த நிலையில் கனடாவின் ஒரு மூலோபாயம் – ஒவ்வொரு நாட்டிற்கும் அதிகமான பாதுகாப்புகளை இணைப்பதாகும் என வைத்தியர் Tam கூறினார். இதுவரை கனடா 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றின் திரிபுகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.