COVID எண்ணிக்கையையும் தீவிரத்தையும் எதிர்கொள்ளவும் பராமரிப்பதற்கும் Ontario அரசாங்கம் புதிய பொது சுகாதார கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (April 16) இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள், வெளிப்புற கூட்டங்களை கட்டுப்படுத்துதல், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை காவல்துறை விசாரிக்க முடியும் போன்ற விடயங்கள் இந்த அறிவித்தலில் இருந்தன. ஆனாலும் இவற்றில் சில அறிவித்தல்களை மாகாண அரசாங்கம் மீளப்பெறவேண்டிய நிலை தோன்றியது.
Ontario மாகாணம் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் பட்டியலின் தொகுப்பு:
மாகாணங்களுக்கிடையிலான பயணம்:
Interprovincial travel
திங்கட்கிழமை (April 19) முதல், Ontario மாகாணம், Ontario, Manitoba, Quebec ஆகிய மாகாணங்களின் எல்லைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்கும். Ontarioவிற்குள் வேலை, மருத்துவ பராமரிப்பு பொருட்களின் போக்குவரத்து, உள்நாட்டு ஒப்பந்த உரிமைகளைப் பயன்படுத்துதல் போன்றோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனாலும் இந்த மாகாணங்களுக்கு இடையிலான விமானம் மூலமான பயணங்களுக்கு எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை.
வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு :
Stay-at-home order
April 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு 28 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது கூடுதல் இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது – அதாவது, குறைந்த பட்சம் May மாதம் 20ஆம் திகதிவரை இந்த உத்தரவு நீடிக்கும்.
மளிகை கடைகளுக்கு அல்லது மருந்தகத்திற்குச் செல்வது போன்ற அத்தியாவசிய நோக்கங்கள் தவிர்த்து குடியிருப்பாளர்கள் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். சுகாதார சேவைகளை அணுகுவது, உடற்பயிற்சி அல்லது அத்தியாவசிய வேலைகளை அணுகுவது அனுமதிக்கப்படும். ஆனாலும் பொது மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவித்தலை மாகாண அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அதேவேளை மாகாணத்தில் உள்ள வணிகங்கள் தகுதியுடைய எந்தவொரு பணியாளரையும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அறிவித்தலும் வெளியானது.
வெளிப்புற கூட்டங்களில் கட்டுப்பாடு
Outdoor gatherings limited
சனிக்கிழமை (April 17) முதல், ஒரே வீட்டு உறுப்பினர்களுக்கு தவிர, அனைத்து வெளிப்புற சமூகக் கூட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட பொது நிகழ்வுகளும் தடைசெய்யப்படும். தனியாக வசிக்கும் ஒருவர் மற்றொரு வீட்டோடு சந்திப்பது அனுமதிக்கப்படும். Golf மைதானங்கள் , கூடை பந்தாட்ட மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்படும்.
சில்லறை கடைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்
Retail capacity slashed
அத்தியாவசியமற்ற கடைகள் காலை 7 மணிக்கு முன்னதாக திறக்கப்படக்கூடாது. இரவு 8 மணிக்கு முன்னர் மூடப்படவேண்டும். இவற்றில் hardware வணிகர்கள், மது கடைகள், curbside கொள்வனவு அல்லது விநியோகத்தை வழங்குபவர்களும் அடங்குவர். நேரில் கொள்வனவுக்கு அனுமதிக்கப்படும் அனைத்து சில்லறை கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், மளிகைக் கடைகளில் 25 சதவீதமானவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
வழிபாட்டுத் தலங்கள்
Places of worship
திங்கட்கிழமை முதல் திருமணங்கள், இறுதி சடங்குகள், மத சேவைகள் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் 10 பேருக்கு மட்டுப்படுத்தப்படும். Drive-in சேவைகள் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியமற்ற கட்டுமானம்
Non-essential construction
அத்தியாவசியமற்ற கட்டுமானங்கள் மூடப்படும் என அரசாங்கம் கூறுகிறது. இவற்றில் வணிக வளாகங்கள், விடுதிகள், அலுவலக கோபுரங்களின் கட்டுமானங்களும் அடங்குகின்றன.
புதிய அமுலாக்க நடவடிக்கைகள்
New Enforcement Measures
Ontarioவில் முதல் முறையாக ஒரு வாகனத்தை அல்லது ஒரு நபரை வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த Ontario மாகாணத்தின் பல்வேறு பகுதியின் காவல்துறையினரும் மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த அறிவித்தலை மாகாண அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.
தொகுப்பு -ரம்யா ஸ்ரீ