தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்: முதல்வர் Ford

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.Ontarioவில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்தும் ஆறாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. இந்த நிலையில் நேற்று Ontario மாகாண முதல்வர் கட்டுப்பாடுகள் குறித்த இந்த கருத்தை தெரிவித்தார்.

குறிப்பாக வரவிருக்கும் Easter விடுமுறை நீண்ட வார இறுதியில் ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறு முதல்வர் கோரியுள்ளார். அதிகரித்து வரும் தொற்றுகள் குறித்து தான் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும், Ontario மாகாண குடியிருப்பாளர்கள் பொது சுகாதார விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் Ford  வலியுறுத்தினார். மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தயங்க மாட்டேன் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் என்ன கட்டுப்பாடு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறது என்பதை Ford  குறிப்பிடவில்லை. இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் முதல்வர் Ford தெரிவித்தார்.

Related posts

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment