அமெரிக்காவிடம் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.
நேற்று கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். அமெரிக்காவுடனான தடுப்பூசி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. அமெரிக்காவில் உற்பத்தியாகும் முதலாவது COVID தடுப்பூசி விநியோகமாக இந்த விநியோகம் அமையவுள்ளது.
இதைத் தவிர கனடாவுக்கான தடுப்பூசி விநியோகங்கள் தொடர் தடைகளை எதிர்கொள்கின்றன. கனடாவுக்கான Moderna தடுப்பூசி விநியோகம் தொடர்ந்தும் தாமதங்களை எதிர்கொள்கின்றது. அதேவேளை Johnson & Johnson தடுப்பூசி விநியோகம் குறித்து புதிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கனடா வியாழக்கிழமை வரை 6.1 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.