இளம் கனேடியர்களிடையே COVID தொற்றுக்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என அறியப்பட்டுள்ளது.
COVID தொற்றின் புதிய திரிபினால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. வயோதிபர்கள் மத்தியில் தொற்றின் புதிய திரிபு சரிவு கண்டாலும், இளம் கனேடி யர்களிடையே பாதிப்பு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளம் கனேடியர்களிடையே அதிகரித்த மரணங்களுக்கான சாத்தியக்கூறு குறித்த எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய திரிபின் அதிகரித்த தீவிரம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியான புதிய தேசிய பொது சுகாதார modelling தரவுகளில் பிரதிபலிக்கிறது என கனடாவின் தலைமை மருத்துவர் வைத்தியர் Theresa Tam தெரிவித்தார். நேற்று வெளியான தரவுகள் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனடியர்களில் தொற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக காட்டுகிறது.
ஆனாலும் 20 முதல் 39 வயதுடையவர்களிடையே புதிய திரிபின் தாக்கம் அதிகரித்திருப்பது தரவுகளில் தெரியவருகின்றது.
நேற்றுவரை, கனடா முழுவதும் 7,100க்கும் மேற்பட்ட தொற்றின் புதிய திரிபுகள் பதிவாகியுள்ளன.