May மாதம் முதல் விடுமுறை நாடுகளுக்கான சில விமான சேவைகளை Air Canada மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
கனேடிய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி கனேடிய விமான நிறுவனங்கள் கடந்த January மாதத்தில் விடுமுறை நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியிருந்தது. இந்த சேவை நிறுத்தம் April மாதம் 30ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் May மாதம் முதல் Jamaica, Mexico, Barbados ஆகிய நாடுகளுக்கான சில சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க Air Canada முடிவு செய்துள்ளது. இதுதவிர அமெரிக்கா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு விமான சேவைகளையும் மீண்டும் May மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாகவும் Air Canada அறிவித்துள்ளது.