Liberal அரசாங்கம் April மாதம் 19ஆம் திகதி ஒரு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கின்றது.
மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். COVID தொற்றால் எதிர்கொள்ளப்படும் செலவினங்கள், கடுமையான வேலையின்மை புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் மத்தியில் கனடாவின் முழுமையான நிதி அறிக்கை வெளியாகவுள்ளது
மத்திய Liberal அரசாங்கம் ஒரு முழு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து 2 வருடங்களுக்கும் மேலாகியுள்ளது. March மாதம் 19ஆம் திகதி 2019ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரவு செலவுத் திட்டத்தில் 2020-21 நிதியாண்டில் கூட்டாட்சியின் பற்றாக்குறை 19.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
இருந்தபோதிலும் 2020ஆம் ஆண்டின் இலைதுளிர் காலத்தில் வெளியான பொருளாதார புதுப்பித்தல் அறிக்கையில் 2020-21 ஆம் ஆண்டில் பற்றாக்குறை குறைந்தது 381.6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.