கனடாவில் COVID தொற்றின் புதிய திரிபு அதிகரித்து வருகிறது.இது நாடளாவிய ரீதியில் மூன்றாவது அலை குறித்து கவலைகளைத் தூண்டுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி நேற்று திங்கட்கிழமை இந்த விடயத்தில் தனது கவலையை வெளியிட்டார்.
மாகாணங்கள் தங்களது தடுப்பூசி திட்டங்களை அதிகரித்துவரும் நிலையில் நாடளா விய ரீதியிலான இந்த மூன்றாவது அலை குறித்து கவலை வெளியா கியுள்ள து. Alberta, Ontario, British Columbia, Quebec ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் பரவக்கூடிய புதிய தொற்றுகள் 5,154 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் Theresa Tam கூறினார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சரிவுக்குப் பின்னர், நாடு முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக வைத்தியர் Tam கூறினார்.