Torontoவில் கடந்த November மாதத்தில் 80 சதவீதமான COVID தொற்றாளர்கள், குறித்த இனரீதியான குழுமம் (racialized group) ஒன்றில் அடையாளம் காணப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் Eileen de Villa, தொற்று பாதிக்கப்பட்ட இன ரீதியான குழுக்கள் தொடர்பான புதிய தரவுகள் குறித்து விளக்கினார்.
அதன்போது பெருந்தொற்றின் ஆரம்பத்திலிருந்து COVID தொற்றாளர்களில் விகிதாசாரத்துக்கு பொருந்தாத எண்ணிக்கையில் இன ரீதியான குழுக்களின் தொற்றாளர் தொகை இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.Novemberரில் Torontoவில் அடையாளம் காணப்பட்ட 79 சதவீதமான COVID தொற்றாளர்களில் இன ரீதியான குழுக்களும் அடங்குகின்றன என்பது மிக முக்கிய விடயம் .

இதனைவிட இவ்வாறு இன ரீதியான குழுக்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் விகிதாசாரம் (52 சதவீதம்) நகரின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளமை ஆச்சரியமான உண்மை .இதேவேளை, Torontoவின் மக்கள் தொகையில் 48 சத வீதமானவர்களே வெள்ளையினத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 21 சத வீதமான தொற்றாளர்கள் வெள்ளையினத்தவர்களென இனம் காணப்பட்டுள்ளனர்.
இதனைவிட, Novemberரில் COVID தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 71 சதவீதமானவர்கள் இன ரீதியான குழுவினைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.விகிதாசாரத்திற்கு புறம்பான விதத்தில் அதிகமாக இருக்கும் இந்த எண்ணிக்கையானது, இந்த குழுக்களின் ஒட்டுமொத்த தொற்று விகிதங்களுடன் ஒத்துப்போகிறது. மேலும் தொற்று ஏற்பட்டால் இன ரீதியான குழுக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் இத்தரவு காண்பிக்கவில்லை என de Villa குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து மக்கள் தொகை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.COVID தொற்றாளர்களில் இன ரீதியான குழுக்களாக அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் அரேபியர்கள் (Arab), மத்திய கிழக்கு (Middle Eastern) அல்லது மேற்கு ஆசியர்கள் (West Asian), கறுப்பினத்தவர்கள் (Black), கிழக்கு ஆசியர்கள் (East Asian), லத்தீன் அமெரிக்கர்கள் (Latin American), தெற்காசியர்கள் (South Asian) அல்லது இந்தோ கரீபியன் (Indo-Carribbean), தென்கிழக்கு ஆசியர்கள் (Southeast Asian) ஆகிய இனக்குழுக்கள் அடங்குகின்றனர்.
அதேசமயம், நகரின் புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் கிழக்கு ஆசியர்களும் வெள்ளையினத்தவர்களும் குறைவான அளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர்.”தெற்காசிய, இந்தோ-கரீபியன் மக்கள் இன ரீதியான குழுக்களுக்கு இடையிலான தொற்றாளர்களில் அதிக விகிதாசாரத்தில், அதாவது 27 சதவீதமாக உள்ளனர். அதேவேளை அவர்களின் மக்கள் தொகை 13 சத வீதமாக உள்ளது” என de Villa கூறினார்.

கடந்த November மாதத்தில், Torontoவில் உள்ள மக்களிடையேயான COVID தொற்று விகிதம் வெள்ளை இன மக்களுடன் ஒப்பிடும்போது (100,000 பேருக்கு 397) இன ரீதியான குழுக்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அதிகமாக (100,000 பேருக்கு 1,372) இருந்தது. இதில் நகரத்தின் ஒட்டுமொத்த தொற்று விகிதம் 905 ஆகும்.
COVID தொற்று குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் மக்கள் தொகை விகிதாசாரத்திற்குப் பொருந்தாத வகையில் பாதித்துள்ளது.அதே வரையறையுடனான 30 சதவீத மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், Novemberரில் அடையாளம் காணப்பட்ட COVID தொற்றாளர்களில் பாதிப்பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாகக் கருதப்படுபவர்களாக உள்ளனர். இதற்கிடையில், COVID தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 54 சதவீதம் பேர் குறைந்த வருமானம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
அண்ணளவாக ஆண்டொன்றிக்கும் 30,000 டொலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பம், தனி நபரைக் கொண்ட குடும்பத்தின் குறைந்த வருமான வழிமுறைகளுடன் ஒத்துப்போகும் அதேவேளை, 50,000 டொலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் இரண்டு முதல் நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தின் அளவும் அவ்வழிமுறைகளுடன் ஒத்துப்போவதாக கூறப்பட்டுள்ளது.
COVID தொற்று அனைவருக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலும், அது இனரீதியான சமூகங்கள், குறைந்த வருமானக் குழுக்கள் மீது உண்மையான, தகமையற்ற சுமைகளை சுமத்துகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு மக்களின் வாழ்க்கை முறையும் பணி நிலைமைகளும் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றன என்பதை கண்டுகொள்வது முக்கியம் ”என de Villa கூறினார்.

கடந்த November மாதத்தில், அதிக வருமானம் பெறும் குடும்பங்களுடன் ஒப்பிடுகையில் (100,000 பேருக்கு 356), குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையிலான தொற்று விகிதம் அதிகமாக (100,000 பேருக்கு 808) இருந்தது.இது நகரின் ஒட்டுமொத்த வீதம் 492 ஆகும்.
இன ரீதியிலான சமூகங்கள் முன்களப் பணியில் அதிகம் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் தொற்றுக்குள்ளாவதாக de Villa சுட்டிக்காட்டினார். தொழிலாளர்கள் பலரும் முன்களப் பணியில் குறைந்த ஊதியம் பெறுபவர்களும் விடுப்பு பெற்றால், அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. இது எங்களின் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கூட தடையாக அமைந்துள்ளது.
“இது COVID தொற்றால் பாதிப்பிற்குள்ளாகும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு, குறிப்பாக ஊதியத்துடனான சுகயீன விடுமுறை நாட்களில் திறம்பட்ட வருமான உதவி வழங்கப்படுவதன் தேவையை இது வலியுறுத்துகிறது” எனவும் மருத்துவர் de Villa தெரிவித்துள்ளார்.
பத்மன் பத்மநாதன்