இலங்கையில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை குறித்தும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படாத நிலை குறித்தும் கனடாவை தளமாகக் கொண்ட Lawyers’ Rights Watch கனடா என்ற அமைப்பு கவலை தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch கனடாவின் வாய்மொழி மூல அறிக்கை இன்று வெளியானது. Lawyers’ Rights Watch கனடாவின் சார்பில் வழக்கறிஞர் ஹரினி சிவலிங்கம் இன்றைய வாய்மொழி மூல அறிக்கையை வெளியிட்டார்
தமிழ் மக்கள் மீதான மீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறப்படாதமையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டமையும், இவை மீள இடம்பெறும் சந்தர்ப்பத்தை அதிகரிப்பதாக அவர் தனது அறிக்கையில் எச்சரித்தார்.