December 12, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு வருத்தமளிக்கிறது: கனடா

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா வெளியிட்ட அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் Rob Oliphant இன்று (வியாழன், February 25, 2021)பின்வரும் கருத்தை வெளியிட்டார்.

“உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையைக் கனடா வரவேற்கிறது.

30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு எமக்கு வருத்தமளிக்கிறது. மீளிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான உள்நாட்டு நடைமுறைகள் தொடர்ந்தும் பயனளிக்கத் தவறிவருகின்றன. தப்பிப்பிழைத்தோர், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உறுதியாக இருப்பதுடன், அசாத்தியமான ஆபத்துக்களின் மத்தியிலும் சான்றுகளை வழங்க முன்வந்துள்ளார்கள். அவர்களது தாங்குசக்தியையும், துணிவையும் நாம் கண்டுணர்கிறோம்.

மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த உயர் ஆணையாளரின் கவலை எமக்கும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது வன்முறைக்கும், மோதலுக்கும் மீண்டும் வழிவகுக்கலாமென்பது வருத்தத்திற்குரியது. குடிசார் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, குடிசார் சமூக செயற்பாட்டுக்கான வெளி, மனித உரிமைகளுக்;கான மதிப்பு, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் வலுவிழக்கச் செய்யப்படுகின்றன. முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, தமிழர்களின் நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பன நாட்டில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும்.

இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதும், மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதும் பேரவைக்குள்ள கடமையெனக் கனடா நம்புகிறது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான முறையில் ஈடுபாட்டைப் பேணுமாறும், மனித உரிமை நிபுணர்களுக்கு விடுத்த நிலையான அழைப்புகளை மதித்துச் செயற்படுமாறும் இலங்கையை ஊக்குவிக்கிறோம்.

உயர் ஆணையாளர் அவர்களே, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் சான்றுகளைத் திரட்டிப் பாதுகாப்பதற்கு நாடுகள் எவ்வாறு செயற்திறன் மிக்க முறையில் ஆதரவளிக்கலாம்? ”

Remarks by Canada on the OHCHR report on Sri Lanka at UNHRC 

Parliamentary Secretary to the  Foreign Minister Rob Oliphant,  delivered the following remarks at the 46th session of the United Nations Human Rights Council today (Thursday, February 25 , 2021) in response to the High Commissioners report on Sri Lanka: 

“Canada welcomes the High Commissioner’s report on Sri Lanka. 

We regret Sri Lanka’s decision to withdraw its support of resolution 30/1. Domestic processes for reconciliation and accountability have repeatedly failed to deliver results. The survivors have been persistent in their efforts to seek the truth, and have taken extraordinary risks to offer evidence.  We recognize their resilience and courage.  

We share in the High Commissioner’s concerns of the deterioration of human rights which regrettably may lead to a recurrence of violence and conflict if unaddressed.  Civilian government, an independent judiciary, civil society space, respect for human rights, democracy and the rule of law are all being undermined. Forced cremations of Muslims, and restrictions on memorialization by Tamils will further fuel divisions on the island.

Canada believes the Council has a responsibility to keep Sri Lanka on its agenda and continue its efforts to promote reconciliation, accountability and human rights.

We encourage Sri Lanka to engage constructively with the OHCHR, and to honour its standing invitation to Special Procedures.  

Madam High Commissioner, how can states most effectively support OHCHR to gather and preserve evidence? ”

 

Related posts

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

தொற்று எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை எதிர்கொள்ளும் கனடா!

Gaya Raja

Leave a Comment