December 12, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை

கனேடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றியபோது இலங்கை குறித்துப் பின்வருமாறு கூறிப்பிட்டார்:

“இலங்கையில், மனித உரிமைப் பாதுகாவலர்களும் குடிசார் சமூக அமைப்புக்களும் அச்சுறுத்தப்படுவது, நினைவுகூர்தல் ஒடுக்கப்படுவது, சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து செல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டுக் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இலங்கையில் புரியப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுதை இந்தப் பேரவை உறுதி செய்யவேண்டியதன் அவசியத்தை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பொறுப்புக்கூறல், மீளிணக்கம், அமைதி ஆகியவற்றுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும். ”

Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Canadian Foreign Minister Marc Garneau delivered the following statement on Sri Lanka in his address at the 46th session of the United Nations Human Rights Council

“Canada is deeply concerned at the deteriorating human rights situation in Sri Lanka, which include threats to human rights defenders and civil society organizations, suppression of memorialization, forced cremations of religious minorities and the deterioration of the rule of law.

The recent report of the High Commissioner for Human Rights highlights the need for this Council to ensure accountability for crimes committed in Sri Lanka. Canada will continue to support measures that will support accountability, reconciliation and peace.”

 

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

வார இறுதிக்குப் பின்னர் கனடாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!

Gaya Raja

Leave a Comment