அமெரிக்காவின் புதிய அதிபருக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான முதலாவது மெய்நிகர் இருதரப்பு சந்திப்பை இன்று (செவ்வாய்) மாலை நடைபெற்றது.
அமெரிக்காவும் கனடாவும் ஒன்றிணைந்து செயல்படும்போது நாங்கள் அனைவரும் சிறப்பான பெறுபேறுகளை பெறலாம் என இன்றைய சந்திப்பில் அமெரிக்க அதிபர் Joe Biden கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கருத்துத் தெரிவித்த கனடிய பிரதமர் Justin Trudeau காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் கடந்த ஆண்டுகளில் வலுவான அமெரிக்க தலைமை இல்லாக் குறையை கனடா உணர்ந்ததாக கூறினார்
பிரதமர் Trudeauவுக்கும் அதிபர் Bidenனுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இரு நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கனடிய துணை பிரதமர் Chrystia Freeland, அமெரிக்க துணை அதிபர் Kamala Harris உட்பட இரு நாடுகளின் உயர் அமைச்சரவை அதிகாரிகளும் இன்றைய மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்றனர்.