அமெரிக்காவில் இருந்து நில எல்லை வழியாக கனடாவுக்கு வருபவர்கள் எதிர்மறையான COVID சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அமெரிக்காவின் நில எல்லை வழியாக கனடா வரும் எவரும் தொற்றுக்கு சோதிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் கூறினார்
இந்த மாதம் 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என பிரதமர் அறிவித்தார். COVID தொற்றின் பரவலை கனடாவுக்குள் தடுக்கும் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இந்த அறிவித்தல் வெளியானது.
கனடாவிற்கு விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளும் January மாதம் ஆரம்பம் முதல் எதிர்மறையான PCR சோதனை கொண்டிருக்க வேண்டும் என்ற நடைமுறை கனடாவில் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.