தேசியம்
செய்திகள்

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள் நாளை (ஞாயிறு) Torontoவிலும் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இனவழிப்பை நிறுத்தவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” பயணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாகனப் பேரணிகள் ஏற்பாடாகியுள்ளன. இந்த வாகனப் பேரணிகளில் கலந்து கொள்வோர் COVID சுகாதார, வாகன நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Torontoவில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Toronto பெரும்பாக்கத்தில் நான்கு இடங்களில் மதியம் 12 மணிக்கு இந்த வாகனப் பேரணி ஆரம்பமகின்றது.

இந்த வாகன பேரணி ஆரம்பமாகும் இடங்கள்:

Markham & Steeles
Brampton Shoppers World
Mississauga City Centre
Ajax New Spiceland

Montrealலில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Montrealலிலும் மதியம் 12 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமகின்றது. இந்த வாகன பேரணி Montreal திருமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமகின்றது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment