Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதிகள் இன்று (புதன்) அறிவிக்கப்பட்டது.
Toronto, York, Peel ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன. இன்று Ontarioவின் கல்வி அமைச்சர் Stephen Lecce இந்த அறிவித்தலை வெளியிட்டார்
பாடசாலைக்கு முன்னரும் பின்னருமான குழந்தை பராமரிப்பு திட்டங்களும் அதே தினங்களில் மீண்டும் ஆரம்பிக்கும் என அமைச்சர் இன்றைய அறிவித்தலில் தெரிவித்தார். அமைச்சரின் இன்றைய அறிவித்தலின் போது Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரியும் உடனிருந்தார். இந்த முடிவுகள் அனைத்து உள்ளூர் மருத்துவ அதிகாரிகளின் ஒருமித்த ஆதரவை பெற்றுள்ளது என கல்வி அமைச்சர் கூறினார்.