திட்டமிடப்பட்டபடி நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகள் March மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் வலியுறுத்துகின்றது.
இதுவரை கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 20வது இடத்தில் உள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளான போலந்து, செர்பியா போன்ற நாடுகளை விட குறைந்தளவு தடுப்பூசிகளே கனடாவில் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. Pfizer, Moderna தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்த உலகின் முதல் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.
கனடாவில் இன்று (வியாழன்) மதியம் வரை 910,00க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.