தேசியம்
செய்திகள்

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுள்ள Joe Bidenனுடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் Justin Trudeau உரையாடவுள்ளார்.

அமெரிக்கா வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியது. அதிபராக  பதவியேற்ற பின்னர் Bidenனுடன் உரையாடவுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவராக Trudeau இருப்பார்.

அமெரிக்காவில் புதிதாக பதவி ஏற்றுள்ள Bidenனின் நிர்வாகத்தை கனடிய தலைவர்கள் பலரும் வாழ்த்தி வரவேற்றுள்ளனர். எல்லை தாண்டிய சவால்களை மீறி பிரகாசமான நாட்களாக இந்த புதிய நிர்வாகம் பதவியேற்ற பின்னர் அமையும் என்ற நம்பிக்கையை கனடிய அரசியல் தலைவர்கள் வெளியிட்டனர்.

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான தனித்துவமான உறவை மேற்கோள் காட்டி கனடிய பிரதமர் Bidenனின் நிர்வாகத்தை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்

அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையிலான அதிகார மாற்றத்தை கனடியர்கள் கொண்டாட வேண்டும் என அமெரிக்காவிற்கான கனடிய தூதர் Kirsten Hillman கூறினார். இந்த பதவியேற்பு விழாவை அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமைக்கு சான்றாகும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau கூறினார்.

Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole, NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh, பசுமை கட்சியின் தலைவி Annamie Paul ஆகியோரும் தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்

அமெரிக்க துணை அதிபராக முதன் முறையாகக் கறுப்பினத்தவரும், தமிழருமான ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளதை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும் என Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்

Related posts

தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாகும் British Colombia

Gaya Raja

November மாதத்தில் குறைந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment