29 நாட்களில், கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
கனடாவில் நேற்று (செவ்வாய்) வரை 387,899 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கனடிய மக்கள் தொகையில் 1.021 சதவீதத்திற்கு சமமானதாகும். கனடாவின் பொது சுகாதார அமைப்பின் தரவுகளின் பிரகாரம் 548,950 தடுப்பூசிகள் January மாதம் 7 ஆம் திகதி வரை கனடாவில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் அரசியல்வாதிகளும் பொது சுகாதாரத் தலைவர்களும் தடுப்பூசி வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளனர். பிரதமர் Justin Trudeau, September மாதத்திற்குள் ஒவ்வொரு கனடியருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதே தனது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.