COVID தொற்றுக்கும் மத்தியில் இந்த விடுமுறை காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கனடியர்களை கோரியுள்ளார்.
தனது வருடாந்த நத்தார் செய்தியில், Trudeau இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். விடுமுறை காலம் மகிழ்ச்சி மற்றும் குடும்ப மரபுகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனக் கூறிய பிரதமர் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு அனைத்தும் மாற்றியுள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
2020ஆம் ஆண்டை ஒரு கடினமான ஆண்டாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த சவாலான காலங்களை தாராள மனப்பான்மை, கருணை மற்றும் நம்பிக்கையுடன் கனடியர்கள் சந்தித்துள்ளனர் எனக் கூறினார். அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் தங்களை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக கனடாவின் முன்னிலை பணியாளர்களையும் பிரதமர் Trudeau நினைவு கூர்ந்தார். COVID நெருக்கடி முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர்Trudeau கனடா அதிலிருந்து வலுவான மற்றும் ஒன்றுபட்ட நாடாக மாறும் எனவும் கூறினார்.