அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கான அழைப்பு Liberal கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது.
Liberal கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட video ஒன்றில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau இந்த அழைப்பை விடுத்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான அழைப்பாக பிரதமரும் Liberal கட்சியின் தலைவருமான Trudeau இந்த அழைப்பு அமைந்துள்ளது.
குறிப்பாக COVID தொற்று நோய் காலத்தில் தங்கள் சமூகங்களுக்கு உதவ உழைக்கும் நபர்களை குறிவைப்பதை மையமாகக் கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் இறுதியில் அடுத்து வருவதைப் பற்றி சிந்திக்க இயற்கையான நேரமாகும் எனத் தெரிவித்த பிரதமர், தொற்று நோய் காலத்தில் தங்கள் சமூகங்களுக்கு உதவும் நபர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சிந்திக்கலாம் எனவும் கூறினார்.
தொற்று நோய்க்கு பிந்தைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் அனைத்து குரல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் பட்டியலை தனது கட்சி விரும்புகின்றது எனவும் Trudeau கூறினார். ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் Liberal கட்சிக்காக போட்டியிடும் வேட்பாளர்களாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சமூகங்கள் அல்லது பின்னணியிலிருந்து வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்
தற்போது சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் Trudeau, அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த விபரங்களை வெளியிடவில்லை.