முதலாவது COVID-19 தடுப்பூசி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவை வந்தடைந்தது.
Pfizer தடுப்பூசியின் ஓரு தொகை இன்றிரவு கனடாவை வந்தடைந்ததை பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார். ஒரு விமானத்தில் இருந்து இந்தத் தடுப்பூசிகள் இறக்கப்படும் புகைப்படத்தையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இந்த விமானம் Montrealலில் உள்ள Mirabel சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை உள்ளூர் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியது. இந்த விமானம் கனடாவை வந்தடைந்தபோது அதனை கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றிருந்தார்.
இந்தத் தடுப்பூசியை நிர்வகிக்கும் முதல் மாகாணமாக Quebec இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை (திங்கள்கிழமை) முதல் இரண்டு நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.