December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

கனடாவில் இன்று (23) 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின.

உலகளாவிய ரீதியில் தொற்றின் எண்ணிக்கை 59 மில்லியனை எட்டிய நிலையில் கனடாவில் இதுவரை 337,555 மொத்த தொற்றுகள் பதிவாகின. தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் மேலும் 66 பேர் இன்று மரணமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கனடாவின் இறப்பு எண்ணிக்கை 11,521 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்றில் பாதிக்கப்பட்ட பின்னர் கனடா முழுவதும் மொத்தம் 2,148 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிரவும் 269,202 பேர் நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

Ontarioவில் இன்று தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டன. Ontarioவில் இன்று அதிகாலை 12:01 மணிமுதல் Toronto மற்றும் Peel பிராந்தியம் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நான்கு வாரங்களுக்கு இந்த முடக்கம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தவிரவும் York, Durham, Halton, Hamilton, Waterloo ஆகிய பகுதிகளிளும் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Albertaவிலும் நாளை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Albertaவின் தலைமை மருத்துவ அதிகாரி அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளுக்கான புதிய பரிந்துரைகள் குறித்து ஆலோசனை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். Alberta உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் செயலில் உள்ள தொற்றுக்களின் எண்ணிக்கையில் Ontarioவை தாண்டியுள்ளது.

இன்று மீண்டும் Ontario, Alberta, Quebec ஆகிய மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 1,589 தொற்றுக்களும் 19 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. Albertaவில் 1,549 தொற்றுக்களும் 5 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. Quebecகில் 1,164 தொற்றுக்களும் 13 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

British Columbiaவில் இன்று 594 தொற்றுக்களும் கடந்த மூன்று நாட்களில் 1,933 தொற்றுக்களும் அறிவிக்கப்பட்டன. British Columbiaவில் 17 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

தவிரவும் Manitobaவில் 543, Saskatchewanனில் 235, New Brunswickகில் 15, Nova Scotiaவில் 11, Yukonனில் 6, Nunavutரில் 4, Newfoundland and Labradorரில் 2, Prince Edward தீவில் 1 என தொற்றுக்கள் இன்று பதிவாகின. Manitobaவில் 7, Saskatchewanனில் 4, New Brunswickகில் 1 என மரணங்களும் இன்று அறிவிக்கப்பட்டன.

Saskatchewanவின் முதல்வர் Scott Moe, சாத்தியமான COVID வெளிப்பாட்டிற்குப் பின்னர் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். அதேவேளை Atlantic bubble என்ற கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருந்து Prince Edward தீவு மற்றும் Newfoundland and Labrador ஆகிய மாகாணங்கள் வெளயேறியுள்ளன. அந்தப் பகுதியில் COVID தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் தொற்றுக்களின் எண்ணிக்கை 24 சதவீதமும், மரணங்களின் எண்ணிக்கை 47 சதவீதமும் அதிகரித்துள்ளன.

Related posts

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் Trudeau மீது சரளைக் கல் வீச்சு – காவல்துறை விசாரணை!

Gaya Raja

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

Lankathas Pathmanathan

Leave a Comment