கனடா அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தது December மாதம் 21ஆம் திகதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான இரு நாடுகளுக்கும் இடையிலான
எல்லை மூடல் குறித்த தற்போதைய ஒப்பந்தம் முதலில் March மாதத்தில் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நீட்டிப்பு இந்த மாதம் 21ஆம் திகதியுடன் காலாவதியாகும் நிலையில் இதனை மீண்டும் ஒருமுறை புதுப்பித்து December மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த நீட்டிப்பு குறித்த முடிவு கனடியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Bill Blairரின் அலுவலகம் தெரிவித்தது.