December 12, 2024
தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தொடர்பாகக் கனடிய பிரதமரியின் அறிக்கை

கனடிய பிரதமர் Justin Trudeau, அமெரிக்க ஜனாதிபதித்
தேர்தலின் முடிவு தொடர்பாகப் பின்வரும் அறிக்கையை இன்று (சனி)
வெளியிட்டார்:

“அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவும், துணை
ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்ட Joe Biden, Kamala Harris
ஆகியோருக்குக் கனடிய அரசின் சார்பாக நான் பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

“கனடாவும், அமெரிக்காவும் உலகில் வேறெங்கும் காணப்படாத,
தனிச்சிறப்புள்ள உறவைக் கொண்டிருக்கின்றன. எமது சேர்ந்த நிலப்பரப்பு,
பொது நலன்கள், ஆழமான தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் பலமான
பொருளாதாரத் தொடர்புகள் எம்மை நெருக்கமான நண்பர்களாகவும்,
பங்காளர்களாகவும், நேச சக்திகளாகவும் ஆக்குகின்றன. இந்த அடித்தளத்தை
மேலும் கட்டியெழுப்பியவாறு COVID-19 உலகத் தொற்றுநோயின் பாதிப்பில்
இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், உடல்நலத்தைப் பேணுவதற்கும்
தொடர்ந்து நடவடிக்கை எடுத்தவாறு, உலகம் முழுவதும் சமாதானம்,
அனைவரையும் உள்வாங்குதல், செல்வச் செழிப்பு, காலநிலை மாற்றம்
என்பன தொடர்பாக நாம் செயலாற்றுவோம்.

“உலகின் மிகப் பெரும் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும்
வேளையில், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பைடன், துணை
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரிஸ் ஆகியோருடனும்,
அவர்களது நிர்வாகம், ஐக்கிய அமெரிக்க கொங்கிரஸ் ஆகியவற்றுடனும்
இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன். ”

Statement by the Prime Minister of Canada on the result of the U.S. presidential election

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the result of theU.S. presidential election:

“On behalf of the Government of Canada, I congratulate Joe Biden and Kamala Harris on their election as the next President and Vice President of the United States of America.
“Canada and the United States enjoy an extraordinary relationship – one that is unique on the world stage. Our shared geography, common interests, deep personal connections, and strong economic ties make us close friends, partners, and allies. We will further build on this foundation as we continue to keep our people safe and healthy from the impacts of the global COVID-19 pandemic, and work to advance peace and inclusion, economic prosperity, and climate action around the world.

“I look forward to working with President-elect Biden, Vice President-elect Harris, their
administration, and the United States Congress as we tackle the world’s greatest challenges together.”

Related posts

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

கொலை வழக்கில் தமிழருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment