COVID தொற்று விடயத்தில் Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ontarioவின் புதிய COVID modelling விபரங்கள் வியாழக்கிழமை (29) வெளியாகின. தொற்றின் இரண்டாவது அலையின் modelling தரவுகளை மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டனர்.
தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து சென்றாலும் மோசமான சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதத்தின் பெரும்பகுதிக்கு நாளாந்தம் குறைந்தது 800 புதிய தொற்றுகள் பதிவாகும் என அதிகாரிகள் கூறினர்.
மிக மோசமான சூழ்நிலையில், November மாதத்தின் பெரும்பகுதிக்கு மாகாணத்தின் ஏழு நாள் சராசரி 1,000 முதல் 1,200 தொற்றுக்களாக உயரக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். September இறுதியில் வெளியான modelling விபரங்கள், October நடுப்பகுதியில் மாகாணத்தில் தினமும் 1,000 புதிய தொற்றுகள் பதிவாக்கலாம் என குறிப்பிடப்பட்டது