தேசியம்
செய்திகள்

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta மாகாணம் முன்னெடுக்கவுள்ளது.

கனடிய மத்திய அரசுடன் இணைந்து Alberta மாகாண அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பதிலாக இந்த விரைவு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. November 2ஆம் திகதி முதல் சர்வதேச பயணிகள் Calgary சர்வதேச விமான நிலையத்திலும் Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான Coutts எல்லைக் கடவையிலும் இந்த விரைவு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பயணிகள் இந்த சோதனையின் மூலம் தொற்றுக்கு எதிர்மறையாக உறுதிப்படுத்தப்படும் வரை தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும். கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள். COVID தொற்றின் அறிகுறிகள் இல்லாத கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் இந்த சோதனைக்கு தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டம் சர்வதேச பயணத்திற்கான தனிமைப்படுத்தல் நேரத்தைக் குறைக்கும் என Alberta முதல்வர் Jason Kenney கூறினார்.

Related posts

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja

Quebecகில் சுகாதாரப் பணியாளர்களும் சமூக சேவை தொழிலாளர்களும் தடுப்பூசி பெறுவதற்கு காலக்கெடு!

Gaya Raja

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Leave a Comment