Ontario மாகாண அரசாங்கம் COVID-19 அவசர உத்தரவுகளை November மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கின்றது
செவ்வாய்கிழமை (20) ஒரு செய்தி குறிப்பில் Progressive Conservative அரசாங்கம் இந்த முடிவை அறிவித்தது. தொற்றின் பரவலில் இரண்டாவது அலைக்கு மத்தியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது
இந்த நீட்டிப்பானது Torontoவில், Peel பிராந்தியம், Ottawa, York பிராந்தியம் ஆகிய பகுதிகள் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்குள் இருக்க வேண்டிய காலத்தில் மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது