December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 14ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கனேடியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகச் சவாலான நிலைமைகளை எதிர் கொண்டதுடன் கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. கனேடிய பொருளாதாரத்தினதும், உணவு விநியோக சங்கிலியினதும் முக்கியமான ஒரு பகுதியான மீன் வளத்துறையைப் பொறுத்தவரை, மீன் பிடிப்படகில் இடைவெளியைப் பேணுவது, அல்லது மீன்பிடியைக் கைவிடுவது என்பனவே தெரிவுகளாக இருந்தன இதற்கு மேலதிகமாக விலையும், தேவையும் குறைவடைந்தமையால் மீனவர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் இது நிதி அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

மீனவருக்கு ஆதரவாக ஏறத்தாழ 470 மில்லியன் டொரை முதலிடுவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்தப் பணத்தின் ஒரு பகுதி, மீனவருக்கான கொடுப்பனவை (Fish Harvesters Benefit) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்த மீன் பிடிக்காலத்தில் 25 சத வீத வருமானக் குறைவை எதிர்பார்ப்போருக்கு அவர்களது இழப்பின் 75 சத வீதத்தை ஈடு செய்வதற்குப் 10,000 டொலர் வரையான உதவி கிடைக்கும். நிலைமை மேம்படும் காலம் வரை தொழிலை மேற் கொள்வதற்கு உதவி தேவைப்படும் சொந்த வணிக முயற்சியைக் கொண்டுள்ள மீனவர்களுக்குத் திருப்பிச் செலுத்தத் தேவையற்ற 10,000 டொலர் வரையான மானியம் மேலதிகமாக வழங்கப்படும். எதிர்வரும் ஆண்டு குறித்துக் கவலை கொண்டுள்ள பணியாளர்களுக்காக, முந்தைய ஆண்டுகளின் வருமானத்தின் அடிப்படையில் மீனவர்கள் வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடிய வகையில் வேலைக் காப்புறுதி விதிகளை அரசு மாற்றவுள்ளது. விவசாயிகளுக்கும், மீன் வளர்ப்போருக்குமாக அரசு Farm Credit Canadaவின் ஊடாக 100 மில்லியன் டொலர் விவசாயம் மற்றும் உணவு வணிக தீர்வுகள் நிதியத்தை (Agriculture and Food Business Solutions Fund) ஆரம்பிக்கிறது.

கனேடிய ஆயுதப் படையினர் கோவிட்-19 இற்கான அவசர நடவடிக்கைகள் உட்படக் கடினமானதும், ஆபத்தானதுமான பணிகளை எப்போதும் செய்கிறார்கள். இதனால், பெரும் எண்ணிக்கையான முன்னாள் படையினர் சேவைக் காலத்தின் பின்னர் நாட்பட்ட வலியுடன் வாழ்கிறார்கள். மக்மாஸ்ட்டர் பல்கலைக் கழகத்தில் முன்னாள் கனேடியப் படையினருக்கான நாட்பட்ட வலி நிலையத்தை (Chronic Pain Centre of Excellence for Canadian Veterans) அமைப்பதாகப் பிரதம மந்திரி இன்று அறிவித்தார். முன்னாள் படையினருக்குத் தேவையான உதவியை வழங்குவதற்காக தேசிய மட்ட ஆய்வு, பயிற்சி, கல்வி என்பவற்றில் இந்த நிலையம் கவனம் செலுத்தும்.

இந்த வைரஸ்க்கு எதிரான நடவடிக்கையில் கனேடிய அரசு ஆரம்பத்தில் இருந்தே முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றின் தலைவர்களுடன் செயற்பட்டு வருகிறது. கோவிட்-19 உலகத் தொற்று நோய் வேகமாகப் பரவ ஆரம்பித்த பின்னர், பூர்வ குடியினரின் வணிக நிறுவனங்களுக்கு வட்டியற்ற கடன்களாகவும், திருப்பிச் செலுத்தத் தேவையற்ற உதவியாகவும் 306 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் இடம் பெறும் வன்முறையில் இருந்து தப்பியோடும் பூர்வகுடிப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவியாக அவசர ஷெல்ட்டர்களுக்கு 10 மில்லியன் டொலரும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்ப நடவடிக்கையே. கோவிட் – 19 இற்கு எதிராக பூர்வ குடிச் சமூகங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிக உதவி வழங்கப்பட வேண்டும்.

கோவிட்-19 பரவலை எதிர் கொள்ளும் சஸ்கெச்சுவானின் வட பகுதி போன்ற இடங்களில் சமூகங்களுக்கு இத்தகைய ஆதரவு தொடர்ந்து தேவை யென்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. இதற்காக, Meadow Lake Tribal Council இற்கும், Metis Nation-Saskatchewan இற்கும் அவர்களின் உலகத் தொற்று நோய் எதிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக, கனேடிய அரசு சமூகங்களுடன் சேர்ந்து உணவு முதல் தேவைப்படும் பொருட்கள் வரையான அனைத்துக்குமாக 2.3 மில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை வழங்கும்.

தேசிய பூங்காக்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைவெளி பேணக் கூடிய சந்தர்ப்பம் உள்ள இடங்களில் காட்டு நடை பாதைகளையும், பசுமையான இடங்களையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவகையில் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து சில தேசிய பூங்காக்கள் பகுதியளவாக மீளத் திறக்கப்படுமெனவும் பிரதம மந்திரி மேலும் அறிவித்தார். ஆனால், அனைத்துக் கனேடியர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகச் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வடக்கில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், படகு செலுத்தல் தொடர்பான புதிய விதிகளை அரசு ஜூன் மாதம் முதலாந் திகதியில் இருந்து நடை முறைப்படுத்தும். கனடாவின் ஆர்க்டிக் கரையோர நீர் நிலைகளிலும், குபெக்கின் வடக்கிலும், லப்றடோரின் கரையோரப் பகுதிகளிலும் பொழுது போக்குப் படகுகள் எவையும் அனுமதிக்கப்படமாட்டா. அத்தியாவசிய மீன் பிடி, வேட்டையாடல் அல்லது உள்ளுர் சமூகத்தினரின் பயன்பாட்டை இந்தத் தடை பாதிக்கமாட்டாது.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 14th 

Over the last two months, a lot of Canadians have faced very challenging situations and very difficult choices. For the Fisheries industries, which is a key part of the Canadian economy and the food supply chain, this means, to figure out how to either space people out on a fishing boat,or cancel operations. On top of that, as prices and demand have gone down, this has putfinancial pressure on fishers and their families.

Today, Prime Minister, Justin Trudeau, announced an investment of almost $470 million to support fish harvesters. Part of the fund will go towards creating the Fish Harvesters. Benefit. Those who are expecting a 25% drop in income this season, will get support to cover 75% of your losses, up to about $10,000. Additional non-repayable grants of up to $10,000 will be provided for fish harvesters who own their own business, and need support to bridge to better times.And for workers who are worried about next year, the government will change Employment Insurance rules so that fish harvesters can apply for EI benefits based on the earnings of previous years. For farmers and aquaculture fisheries, the government is also launching an $100 million Agriculture and Food Business Solutions Fund through Farm Credit Canada.

Members of the Canadian Armed Forces have always been there to do tough, dangerous jobs including as part of COVID-19 emergency response. So, after a lifetime of service, far too many veterans live with chronic pain. The Prime Minister, today, announced the launch of the Chronic Pain Centre of Excellence for Canadian Veterans at McMaster University. This Centre will focus on national research, training, and education to provide veterans with the support they deserve.

Since day one, the Canadian government has been engaging with First Nations, Inuit, and Metis Nation leaders in the fight against this virus.Since the outbreak of the COVID-19 pandemic, over $ 306 million has been allocated to provide interest-free loans and non- repayable contributions to Aboriginal businesses. More than $75 million in targeted support has been provided for First Nations, Inuit and Métis students, and $10 million for emergency shelters for aboriginal women and children fleeing violence at home. This is a start, but more needs to be done to support Indigenous communities respond to COVID-19 outbreak.

In places like Northern Saskatchewan that are dealing with COVID-19 outbreaks, it’sbecome very clear that communities need this work to continue. In response to this, the government has announced support for the Meadow Lake Tribal Council and Metis Nation-Saskatchewan, for their Pandemic Response Plan. Through this plan, the Government of Canada will partner with communities to provide over $2.3 million for everything from food to supplies.

The Prime Minister also announced that as of the beginning of June, some National Parks willbe partially re-opening so that people in the area can use trails and green spaces where physical distancing is possible. However, some restrictions will remain in place to keep all Canadians safe. The government will be bringing in new regulations on boating as of June 1stto protect vulnerable communities in the North. No pleasure craft will be permitted to operate in Canada’s Arctic coastal waters, or in the coastal areas of northern Quebec and Labrador. Thisban will not include boats used for essential fishing and hunting, or for local community use.

Related posts

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Lankathas Pathmanathan

Leave a Comment