Ontario மாகாண சட்டமன்ற அமர்வு செவ்வாய்க் கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது. மாகாண ரீதியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் குளிர் கால இடைவேளையில் இருந்து சட்டமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.
புதிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் ஆதிக்கம் செலுத்தும் என சட்ட மன்றத் தலைவர் Paul Calandra தெரிவித்தார். ஆனாலும் ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை என அவர் கூறினார்.
இதே வேளை March மாதத்தில் எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இம் முறை அரசாங்கம் சீரான அணுகு முறையை எடுக்கும் என நிதியமைச்சர் Rod Phillips கூறினார்.