தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தில் ஒரு நாள் அனைத்து பொதுப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன!

Ontario மாகாண அரசாங்கத்திற்கும் ஆசிரியர் தொழில்சங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை  தொடர்கின்றது. Ontario மாகாணத்தின் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் Ontario மாகாணத்தின் அனைத்து பொதுப் பாடசாலைகளும் அடுத்த வாரம்  ஒரு நாள் (வெள்ளிக்கிழமை February 21) மூடப்படவுள்ளன. Ontario மாகாணத்தின் நான்கு ஆசிரியர் சங்கங்களும் கூட்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பொதுப் பாடசாலைகளும் பாதிக்கப்படவுள்ளன.
ஆரம்ப பாடசாலை முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் February மாதம் 21 ஆம் திகதி ஒரு நாள் வெளிநடப்பை மேற்கொள்ளவுள்ளனர். இதனால் மாகாண ரீதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் ஆசிரியர்களுடனான சர்ச்சையை தீர்த்து வைக்க Ontario மாகாண அரசாங்கத்திற்கான அழுத்தம் அதிகரிக்கின்றது.

Related posts

மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு நிதி உதவி

Lankathas Pathmanathan

வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் சேவை கட்டணத்தை மீள வழங்கும் Rogers நிறுவனம்

Lankathas Pathmanathan

April மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் வரவு செலவு திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment