Ontario மாகாண அரசாங்கத்திற்கும் ஆசிரியர் தொழில்சங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்கின்றது. Ontario மாகாணத்தின் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் Ontario மாகாணத்தின் அனைத்து பொதுப் பாடசாலைகளும் அடுத்த வாரம் ஒரு நாள் (வெள்ளிக்கிழமை February 21) மூடப்படவுள்ளன. Ontario மாகாணத்தின் நான்கு ஆசிரியர் சங்கங்களும் கூட்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பொதுப் பாடசாலைகளும் பாதிக்கப்படவுள்ளன.
