தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து கனடா பின்வாங்காது: Justin Trudeau

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து கனடா பின்வாங்காது என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump வரி விதித்துள்ளார்.

இதன் மூலம் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க   இறக்குமதிகள் மீது கனடா வரி விதித்துள்ளது.

அமெரிக்க வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த தருணத்தில், கனடாவின் பதில் நடவடிக்கையும் அமுலுக்கு வந்தது என பிரதமர்  Justin Trudeau  கூறினார்.

155 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு எதிராக கனடா 25 சதவீத வரியை அமுல்படுத்தும் என  பிரதமர்   தெரிவித்தார்.

இதில் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாகவும், மீதமுள்ள 125 பில்லியன் டாலர் பொருட்களுக்கு 21 நாட்களில் வரி விதிப்பு அமுலுக்கு வரவுள்ளது.

அமெரிக்கா கனடாவுக்கு எதிரான விதித்த வரிகள் திரும்பப் பெறப்படும் வரையிலும், கனடாவின் வரிகள் நடைமுறையில் இருக்கும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், வரி விதிக்கும் இந்த நகர்வு மிகவும் முட்டாள்தனமான செயல் என செவ்வாய் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்கா அதிபரிடம் கனடிய பிரதமர் கூறினார்.

இந்த நிலையில் கனடா விதிக்கும் எந்த ஒரு பதில் வரி விதிப்புகளுக்கும் பொருந்துவதாக அமெரிக்கா வரிகளை விதிக்கும் என Donald Trump சூளுரைத்தார்.

Related posts

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment